மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 158 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், அங்கு பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 288 தொகுதிகள் கொண்ட அந்த மாநிலத்தில், பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதேபோல், காங்கிரஸுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தற்போதைய நிலவரப்படி, பாஜக 99 தொகுதிகளிலும் சிவசேனா 59 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ள நிலையில், மொத்தம் 158 தொகுதிகளில் இந்த கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் 43 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 55 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ள நிலையில், மொத்தம் அந்த கூட்டணி 98 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆட்சியை பிடிக்க 145 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், 158 இடங்களில் முன்னிலையில் உள்ள பாஜக கூட்டணி மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.