விமானங்களில் உயிரி எரிபொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக விமான நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசு சலுகைகளை வழங்குகிறது.
தற்போதைய உலக சூழலை பொறுத்தவரை பூமியானது வெப்பமயமாவது என்பது மிகவும் சிக்கலான ஒன்றுதான். இதனால் பூமியின் பல்லுயிர்ப்புத் தன்மையானது பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. படுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை ஏறக்குறைய பூஜ்ஜிய நிலைக்கு குறைப்பதற்கான வேலையை நாம் விரைந்து பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம். கார்பன் உமிழ்வால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை உணர்ந்து உலக நாடுகள் இன்று புதுப்பிக்கத்தாக எரிசக்தி ஆற்றல் வளங்களை முன்வந்து உற்பத்தி செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் அவற்றின் உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிங்கப்பூர் விமான போக்குரத்து ஆணையமானது கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் வகையில் உயிரி எரிபொருள் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, உயிரி எரிபொருளை அதிகளவில் பயன்படுத்தும் விமான் சேவை நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் ஊக்குவிப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசு, விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவை 2050-க்குள் கார்பன் உமிழ்வை பூஜ்யம் நிலைக்கு குறைப்பதற்கு உறுதியேற்று இருக்கின்றன. அது சாத்தியப்பட வேண்டும் எனில், நிலையான உயிரி பொருள் விநியோகம் சுமார் 1600 மடங்கு அதிகரிக்க்ப்பட வேண்டும் என்பதையும் மதிப்பீடுகள் சுட்டிக் காட்டுகின்றன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இதற்கான முன்னேற்றம் வலுவான நிலையில் இருந்தாலும், தென்கிழக்கு ஆசியா அடுத்த வரும் தசாப்தங்களில் விமானப் பயணத்துக்கான முக்கிய மையமாகத் திகழும். இந்த பிராந்தியத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்று செயல்படுவதற்கு சிங்கப்பூர் சிறந்த நிலையில் உள்ளது என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் ஜீரோ கார்பன் உமிழ்வை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் சிங்கப்பூரின் இத்தகைய நடவடிக்கை உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது என்று சுற்றுச்சூழலியளார்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post