பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்து பயோ டீசல் ஆக மாற்றும் திட்டத்தை திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தனியார் ஆயில் சுத்திகரிப்பு நிலையம் இணைந்து உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்து பயோ டீசல் ஆக்கும் திட்டத்தை செயல்படுத்துகின்றன. திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராமன், இத்திட்டத்தில் 300 உணவகங்கள் இணைந்திருப்பதாகவும், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், லிட்டர் ஒன்று 25 ரூபாய்க்கு வாங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.