தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் வனப்பகுதிகளில் அரசியல் விளம்பர பலகை வைக்க தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகள், பாலங்கள், மலைகள், வனப்பகுதிகளில், அரசியல் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்கக்கோரி, யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பாலங்கள் மற்றும் சாலைகளின் இருபுறங்களிலும் விளம்பர பலகைகள் வைப்பதால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதாகவும், இதனால் விபத்துக்கள் நேர்வதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, நெடுஞ்சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் விளம்பர பலகை வைக்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. தடைகளை மீறி விளம்பர பலகைகள் வைத்தால், கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post