கங்கை நதிமேல் கட்டியிருந்த பாலம் நதியிலேயே விழுந்தது! பீஹாரில் அதிர்ச்சி!

இந்தியாவின் புனித நதி என்று அழைக்கப்படும் கங்கை நதியானது, 2525 கிமீ நீளம் கொண்டது. இமயமலையின் கங்கோத்திரி பகுதியில் உருவாகி இந்தியாவிலும் வங்கதேசத்திலும் ஓடி கடலில் கலக்கிறது. கங்கையின் ஒரு பகுதி பீஹார் மாநிலம் பாகல்பூர் வழியாக செல்கிறது. குறிப்பாக, பாகல்பூர் மாவட்டத்தின் சுல்தான்கஞ்ச் மற்றும் ஹாகரியா மாவட்டத்தின் அகுவானி ஆகிய ஊர்களின் இடையே கங்கை நதியின் வழித்தடம் உள்ளது. இந்த இரண்டு ஊர்களையும் இணைக்கும் பொருட்டு பிஹார் அரசானது பாலம் ஒன்றினை ரூபாய் 1716 கோடி ரூபாயில் கட்டிக்கொண்டிருந்தது.

இந்த பாலத்திற்கான அடிக்கல்லை பிஹார் முதலமைச்சர் நிதிஸ்குமார் 2014 ஆம் ஆண்டு நாட்டினார். கடந்த ஆண்டு இந்த பாலத்தின் ஒரு பகுதியானது பலத்த் சூறைக்காற்றினால் சேதமடைந்திருந்தது. எனவே அதனை மறுசீரமைத்து புணரமைக்கும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டிருந்தது. மறுசீரமைக்கும் பணி நடக்கையிலேயே இந்த பாலமானது இடிந்து கங்கையிலேயே வீழ்ந்தது. இதனையொட்டி இந்தப் பாலமானது எப்படி நிலைகுலைந்து போயிருக்கும்? இதன் கட்டட அமைப்பு ஏன் தரமற்றதாக இருக்கிறது என்று ஆராய பிஹார் மாநில முதல்வர் நிதிஸ்குமார் ஆய்வுக் குழு ஒன்றினை அமைத்துள்ளார். இந்தப் பாலம் இடிந்து விழுந்த காட்சியானது சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

Exit mobile version