ஒடிசாவில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவில், நூற்றுக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்ட ரயில் விபத்துகள் குறித்து பார்ப்போம்.
12 செப்டம்பர் 1902 – மும்பை-சென்னை மெயில், ஆந்திராவின் கடப்பா மாவட்டம் மங்கப்பட்டினம் அருகே உள்ள பாலத்தில் தடம் புரண்டது. இதில் 100 பயணிகள் இறந்தனர்.
27 ஏப்ரல் 1920 – மொராதாபாத் அருகே டூன் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதியதில் 120 பேர் உயிரிழந்தனர்; 50 பேர் காயமடைந்தனர்.
17 ஜூலை 1937 – கொல்கத்தாவிலிருந்து சென்ற அப்பர் இந்தியா எக்ஸ்பிரஸ் ரயில், பாட்னாவில் பிஹ்தா ரயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானதில் 119 பேர் உயிரிழப்பு; 180 பேர் காயமடைந்தனர்.
27 செப்டம்பர் 1954 – ஆந்திராவின் ஜங்கான் மற்றும் ரகுநாத்பள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள கர்டர் பாலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 136 பேர் இறந்தனர்.
28 செப்டம்பர் 1954 – ஹைதராபாத்தில் உள்ள யசந்தி ஆற்றில் ரயில் தடம்புரண்டு விழுந்ததில் 139 பேர் உயிரிழப்பு; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2 செப்டம்பர் 1956 – ஹைதராபாத்தில் ஜட்செர்லா மற்றும் மஹ்பூப்நகர் இடையே பாலம் இடிந்து ரயில் விபத்துக்குள்ளானதில் 125 பேர் கொல்லப்பட்டனர்; 22 பேர் காயமடைந்தனர்.
23 நவம்பர் 1956 – சென்னை-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ஆற்றில் விழுந்தது. 104 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர்.
22 ஜூலை 1962 – ஹவுரா செல்லும் பஞ்சாப் மெயில், தும்ரான் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது மோதியதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
22 ஜூலை 1963 – உத்தரப்பிரதேசத்தின் துண்ட்லா சந்திப்பு அருகே எட்மட்பூரில் உதயன் அபா டூபன் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 100 பயணிகள் கொல்லப்பட்டனர்.
23 டிசம்பர் 1964 – பாம்பன்-தனுஷ்கோடி பயணிகள் ரயில் ராமேஸ்வரத்தில் சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்டதில்126 பயணிகள் உயிரிழப்பு.
6 ஜூன் 1981 – பீகாரில் பாக்மதி ஆற்றறைக் கடக்கும்போது ரயில் தடம் புரண்டு விழுந்ததில் 300 முதல் 800 பேர் வரை கொல்லப்பட்டனர்
15 செப்டம்பர் 1984 – ஜபல்பூர் கோண்டியா பயணிகள் ரயில் மத்தியப்பிரதேசத்தின் பாலகாட், சாரேகான் அருகே ஆற்றில் மூழ்கியதில் 150 பேர் கொல்லப்பட்டனர்.
8 ஜூலை 1988 – ஐலண்ட் எக்ஸ்பிரஸ் பெருமான் பாலத்தில் தடம் புரண்டு அஷ்டமுடி ஏரியில் விழுந்ததில்105 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் காயமடைந்தனர்.
20 ஆகஸ்ட் 1995 – பெரோசாபாத் அருகே நின்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மோதிய விபத்தில் 400 பேர் கொல்லப்பட்டனர்.
26 நவம்பர் 1998 – ஜம்மு தாவி-சீல்டா எக்ஸ்பிரஸ் கன்னாவில் உள்ள ஃபிரான்டியர் கோல்டன் டெம்பிள் மெயிலின் தடம்புரண்ட மூன்று பெட்டிகள் மீது மோதியதில் 212 பேர் உயிரிழந்தனர்.
2 ஆகஸ்ட் 1999 – கைசல் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவத் அசாம் எக்ஸ்பிரஸ் மீது பிரம்மபுத்ரா மெயில் மோதியதில் 285 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
9 செப்டம்பர் 2002 – ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் கயா மற்றும் டெஹ்ரி-ஆன்-சோன் நிலையங்களுக்கு இடையே உள்ள பாலத்தில் தடம்புரண்டு இரண்டு பெட்டிகள் ஆற்றில் விழுந்த விபத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
29 அக்டோபர் 2005 – ஆந்திராவின் வலிகொண்டா நகரில், திடீர் வெள்ளத்தில் சிறிய பாலம் அடித்துச் சென்றதால் டெல்டா பாஸ்ட் பாசஞ்சர் ரயில் விபத்துக்குள்ளானதில்114 பேர் உயிரிழப்பு; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
11 ஜூலை 2006 – மும்பையில் ரயில் குண்டுவெடிப்பு தாக்குதலில் 200 பேர் வரை கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
28 மே 2010 – மேற்குவங்க மாநிலம் மிட்னாபூரில், ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் தரம்புரண்ட விபத்தில்148 பேர் கொல்லப்பட்டனர்.
2 ஜூன் 2023 – ஒடிசாவின் பாலசோர் ரயில் நிலையத்தில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.