தமிழகத்தை தாக்கிய மிகப்பெரிய புயல்கள்!

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை தாக்கிய மிகப் பெரிய புயல்கள் குறித்த ஒரு சிறப்பு செய்திக்தொகுப்பை தற்போது பார்க்கலாம்

தமிழகத்தில் 2000-ம் ஆண்டுக்கு பிறகு 6 பெரிய புயல்கள் உருவாகின. 2005-ம் ஆண்டில் மட்டும் பியார், பாஸ், பனூஸ் என 3 புயல்கள் உருவாகி சேதத்தை உருவாக்கின.

ஃபர்னூஸ் புயலால் தமிழகமே வெள்ளக்காடானது, மாநிலம் முழுவதும் கடுமையான பயிர்ச் சேதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளில் வீசிய 5 புயல்கள் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தின.

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி வங்கக் கடலில் உருவான நிஷா புயல், மறுநாள் மணிக்கு சுமார் 83 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்த புயலுக்கு 189-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்/ ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்தன.

2010ம் ஆண்டு தென் சீனக் கடலில் உருவான ஜல் புயல், இந்தியப் பெருங்கடல் நோக்கி நகர்ந்தது. நவம்பர் மாதம் 6ம் தேதி அன்று மணிக்கு சுமார் 111 கிலோமீட்டர் வேகத்தில் சென்னையைக் கடந்த புயலால் 54 பேர் உயிரிழந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதியில் தோன்றிய தானே புயல், 2011ம் ஆண்டு டிசம்பர் 28 அன்று மணிக்கு சுமார் 165 கிலோ மீட்டர் வேகத்தில் கடலூர் மற்றும் புதுச்சேரியை ஒட்டி கரையைக் கடந்தது. இந்த புயலால், 46 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பலரது வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்துபோனது.

கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வங்கக்கடலில் உருவான நீலம் புயல் மணிக்கு சுமார் 83 கிலோமீட்டர் வேகத்தில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இதனால், கடல் நீர் 100 மீட்டர் அளவுக்கு நகருக்குள் புகுந்தது. இந்த புயலால், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறினர். சுமார் 450 மின் கம்பங்கள் சாய்ந்தன.

நீலம் புயலை அடுத்து தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய புயல் மடி (MADI). கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி உருவான இப்புயல், மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் வேதாரண்யம் பகுதி வழியாகக் கடந்தது.

2016-ம் ஆண்டில் மட்டும் ரோனு, கியான்ட், நடா என்று அடுத்தடுத்து புயல்கள் உருவானபோதும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. டிசம்பர் 12ம் தேதி 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையை ஆக்ரோஷத்துடன் கடந்து சென்ற வர்தா புயல், கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. 22 பேர் உயிரிழந்த நிலையில், மின்சாரம், போக்குவரத்து தடைபட்டு, சென்னையே திக்குமுக்காடிப் போனது.

2017-ம் ஆண்டு அரபிக் கடலில் உருவான ஒக்கி புயல், மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் கன்னியாகுமரி மற்றும் கேரளைவை புரட்டிப் போட்டது. 42 பேரும் உயிரிழந்தனர். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கன்னியாகுமரி பகுதியே தனித்தீவாக மாறியது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாயின.

2018ஆம் ஆண்டில் கஜா புயல் கோரத்தாண்டவத்துக்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 52 பேர் இறந்தனர். 128 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உருக்குலைந்தன. ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன.

10 ஆண்டுகளில் வீசிய நிஷா, தானே, வர்தா, ஒக்கி, கஜா ஆகிய 5 புயல்கள் 359 உயிர்களை பலிகொண்டுள்ளது.

==============

தமிழகத்தை உலுக்கிய புயல்கள்

2005 – தமிழகத்தில் பியார், பாஸ், ஃபர்னூஸ் என 3 புயல்கள் உருவாகி சேதத்தை ஏற்படுத்தின
——–
2005 – ஃபர்னூஸ் புயல்
ஃபர்னூஸ் புயலால் தமிழகமே வெள்ளக்காடானது, மாநிலம் முழுவதும் கடுமையான பயிர்ச் சேதம் ஏற்பட்டது.
——–
2008 – நிஷா புயல்
நவம்பர் 25 அன்று மணிக்கு 83 கி.மீ., வேகத்தில் வீசிய நிஷா புயலால் தமிழகத்தில் 189 பேர் உயிரிழப்பு
——–
2010 – ஜல் புயல்,
நவம்பர் 6 அன்று மணிக்கு 111 கி.மீ., வேகத்தில் சென்னையைக் கடந்தது – புயலால் 54 பேர் உயிரிழப்பு
——–
2011 – தானே புயல்
டிசம்பர் 28 அன்று மணிக்கு 165 கி.மீ., வேகத்தில் கடலூர் மற்றும் புதுச்சேரியை ஒட்டி கரையைக் கடந்தது.
——–
2011 – தானே புயல்
தானே புயலால், 46 பேர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன
——–
2012 – நீலம் புயல்
அக்டோபர் 31 அன்று 83 கி.மீ. வேகத்தில் வீசிய நீலம் புயல் மாமல்லபுரத்தில் கரையை கடந்தது
——–
2012 – நீலம் புயல்
கடல் நீர் 100 மீட்டர் அளவுக்கு நகருக்குள் புகுந்தது. 450 மின் கம்பங்கள் சாய்ந்தன.
——–
2013 – மடி புயல்
நீலம் புயலை அடுத்து தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய புயல் மடி
——–
2013 – மடி புயல்
டிசம்பர் 8 அன்று மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வேதாரண்யத்தில் கரையை கடந்தது
——–
2016– வர்தா புயல்
டிசம்பர் 12ம் தேதி 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையை ஆக்ரோஷத்துடன் கடந்து சென்ற வர்தா புயல்,
——–
2016– வர்தா புயல்
22 பேர் உயிரிழந்த நிலையில், மின்சாரம், போக்குவரத்து தடைபட்டு, சென்னையே திக்குமுக்காடிப் போனது.
——–

2017 – ஒக்கி புயல்
மணிக்கு 185 கி.மீ வேகத்தில் கன்னியாகுமரி மற்றும் கேரளாவை புரட்டிப் போட்டது. 42 பேரும் உயிரிழப்பு

——–
2017 – ஒக்கி புயல்
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு, கன்னியாகுமரி பகுதியே தனித்தீவாக மாறியது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாயின.
——–
2018 – கஜா புயல்
கஜாவின் கோரத்தாண்டவத்துக்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு
——–
2018 – கஜா புயல்
மணிக்கு 128 கி.மீ., வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உருக்குலைந்தன.
——–

 

Exit mobile version