போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்று, பிளாஸ்டிக் அல்லாத, குறைந்த அளவிலான பொருட்களையே மக்கள் தீயிட்டுக் கொளுத்தியால், போகி பண்டிகையின் போது சென்னையில் கடந்த ஆண்டை விட 40% காற்று மாசு குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
போகி பண்டிகையால் ஏற்பட்ட காற்று மாசுபட்டை கணக்கிடுவதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சென்னையில் காற்றின் மாசு குறித்து கணக்கீடு செய்யப்பட்டது. திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அம்பத்தூர், உள்ளிட்ட மாநகராட்சியின் 15 மண்டலங்களில் காற்று மாசு கணக்கீடு நடைபெற்றது. அதனடிப்படையில், போகி பண்டிகையின் போது கடந்த ஆண்டை விட 40% காற்று மாசு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய வாயுக்களின் அளவு அனுமதிக்கப்பட்ட தர அளவை விட குறைவாகவே இருந்ததாவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.