ஐ.எஸ்.எல். கால்பந்து – பெங்களூரு அணி 2-1 என்ற கணக்கில் கேரளாவை வீழ்த்தியது

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர் அணியை, பெங்களூரு எப்.சி. அணி 2-க்கு 1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐந்தாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் பெங்களூரு எப்.சி அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-க்கு 1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்து வந்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 80-வது நிமிடத்தில் பெங்களூரு அணியை சேர்ந்த நிகோலா கிரெம் விரிக். ஒரு கோல் அடித்து, பெங்களூரு அணியை 2-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலைப்படுத்தினார்.

இதன் பின்னர் ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளும் கோல் போடவில்லை. இறுதியில் கேரள அணியை, பெங்களூரு அணி 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 4-வது வெற்றியை பெற்றுள்ளது.

Exit mobile version