ஐஎஸ்எல் கால்பந்து போட்டி- கொல்கத்தா அணியை கேரளா வீழ்த்தியது.

 

ஐஎஸ்எல் கால்பந்து தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவை, கேரளா பிளாஸ்டர்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

இந்தியன் கால்பந்து லீக்கின் 5-வது சீசன் நேற்று தொடங்கியது. இதன் முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின. முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் போட முடியவில்லை.

இதனால், இரண்டாம் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. 77-ஆவது நிமிடத்தில் கேரள அணி சார்பில் போப்லாட்னிக் முதல் கோலை அடித்தார். இதையடுத்து, கொல்கத்தா அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அந்த அணி கோல் போட முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. அதே சமயம், போட்டியின் 86-ஆவது நிமிடத்தில் ஸ்டோஜனோவிக் 2-ஆவது கோலை அடித்தார்.

பதில் கோல் அடிப்பதற்கு கொல்கத்தா அணியினர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதன்மூலம், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது

Exit mobile version