தேமுதிக சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழால் தள்ளு முள்ளு

தருமபுரியில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், தள்ளு முள்ளு ஏற்பட்டதால், பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

வள்ளலார் திடலில் தேமுதிக சார்பில், பொங்கல் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின்மகன் விஜயபிரபாகரன் கலந்துகொண்டு, பொங்கல் பரிசுகளை வழங்கினார். பரிசு பொருட்களை பெறுவதில், தொண்டர்களுக்கும், பெண்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ஏராளமான பெண்கள் பலர், பரிசு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனார். இந்த தள்ளு முள்ளில், சில தொண்டர்கள் அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து பொதுமக்கள் மீது வீசி எறிந்தனர். இதனால், கூட்டம் நடைபெற்ற இடத்தில் பதற்றம் நிலவியது.

Exit mobile version