ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலின் குண்டம் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
புகழ்பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் குண்டம் தேர்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்ச்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த 27-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நாள்தோறும் விதவிதமான அலங்காரத்துடன் காட்சியளிக்கும் அம்மனை பக்தர்களை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை, சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Discussion about this post