கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சோழன் ஏரியில் தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து, வண்டல் மண் எடுக்கும் பணியை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.
குறிஞ்சிப்பாடியை அடுத்த கீழூர் ஊராட்சியில் 94 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சோழன் ஏரி, அப்பகுதியின் குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான பாசன ஆதாரமாகவும் திகழ்கிறது. இந்நிலையில் ஏரியின் நீர் ஆதாரத்தை பெருக்கவும், ஏரியின் கொள்ளளவை அதிகபடுத்தவும், வண்டல் மண் எடுக்கும் பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் பணியைத் துவங்கியுள்ளதால், ஏரியின் ஆழம் அதிகரித்துள்ளது. இதனால் மழை காலங்களில் அதிக தண்ணீரை சேமிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பொதுமக்கள் தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.