பிச்சைக்காரர் கிட்ட இம்புட்டு பணமா?
நம் அன்றாட வாழ்கையில் நம் தெருக்களிலும் சாலை ஓரங்களிலும் நாம் சாதாரணமாக பார்கும் மக்கள் ஏராளம். அதில் அவர்களை எல்லா நாம் எளிதில் கடந்து இருப்போம். ஆனால் அவர்களில் இருந்து சற்று மாறுப்படுபவர்கள் சாலைகளிலும், தெருக்களிலும் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்கள். பிச்சைக்காரர்கள் என்றதுமே நம் மனதில் டக்கென்று தொன்றுவது விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் தான். ஆனால் இந்த படத்திற்கு பிறகுதான் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று புரிய வந்தது என்று கூட சொல்லலாம். இருந்தும் பிச்சைக்காரர்கள் என்றால் உடனடியாக நியாபகம் வருவது அவர்கள் ஏழைகள், பாவப்பட்டவர்கள் என்றுதான் நியாபகத்திற்கு வரும். ஆனால் இங்கு ஒருவர் பிச்சை எடுத்தே கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம் தமிழ் சினிமாவில் வரும் காமெடி காட்சி ஒன்று தான் நியாபகம் வருகிறது ஷாஜகான் படத்தில் வரும் கோவை சரளா சினெகிதனே சினெகிதனே என்று பாட்டு பாடி பிச்சை எடுத்தே கவுன்சிலர் ஆகி இருப்பார் அதுபோலவே இங்கு ஒருவரும் அப்படி ஆகியிருக்கிறார் கவுன்சிலராக அல்ல கோடீஸ்வரராக!
பாரத் ஜெயின் எனும் பணக்கார பிச்சைக்காரர்..!
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்தவர் பாரத் ஜெயின். இவர் மும்பையின் பல தெருக்களில் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அங்குள்ள பல தெருக்களில் பிச்சை எடுத்தே நறைய பணம் சம்பாதிது உள்ளார். இவருடைய மாத வருமானமே சுமார் 60,000 முதல் 75,000 வரை இருக்கும் என கூறப்படுகிரது. இதனை கேட்டதுமே அனைவருக்கும் அதிர்சியளித்து இருக்கும் என்று தெரிகிறது. பட்ட படிப்பு படிப்பதை விட பட்ட பகலில் பிச்சை எடுக்கலாமே என்ற எண்ணம் கூட தோன்றும் தான்!. இன்னும் இருக்கு! இவரது இரண்டு பெட்ரூம் மட்டுமே சுமார் 1.5 கோடி மதிப்பு உள்ளதாம். இவருக்கு சொந்தமா பிளாட் ஒன்று மும்பையில் இருக்கிறது. இவர் அதே பகுதியில் சொந்தமாக இரண்டு கடைகள் வைத்துள்ளாராம். இந்த கடைகளின் வாடகை மட்டுமே மாதம் 30,000 ரூபாய் வருகின்றதாம். இவரதின் மொத்த சொத்து மதிப்பே 7.5 கோடி ரூபாய் மதிப்பு உள்ளது என்று அப்பகுதி மக்கள் வாய் பிளக்கிறார்கள். என்ன? பிச்சை எடுக்க போலாமா? போலாம் ரைட்..!
Discussion about this post