தக்காளிச் சாறு முகத்திற்கு இத்தனை பொலிவு தருமா?

முகத்தை பளிச்சென வைத்துக்கொள்ள வேண்டும் என பெண்கள் அனைவரும் ஏதேதோ செய்கின்றனர்.அவை பலன் தருகிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற முடியும்..ஆனால் இயற்கை முறையில் தக்காளியை பயன்படுத்தி முகத்தை பளிச்சென மாற்ற சில டிப்ஸ்கள் இதோ..

1.பழுத்த தக்காளியை அரைத்து முகத்தில் தடவிய பின் 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகத்திற்கு நல்ல பொழிவு தரும்.முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க உதவும்.

2.வெள்ளரிக்காய் மற்று தக்காளி சாறினை கலந்து cotton-னில் நனைத்து முகத்தில் தடவ வேண்டும்.இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள தழும்புகள் மறையும்.

3. 2 தக்காளியுடன், 1/2 கப் தயிரை சேர்த்து அரைத்து முகம், கால், கைகளில் பூசி வந்தால் உங்கள் சருமத்திற்கு உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும்.

4.சிறிது தக்காளி சாறுடன் தேனை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெரும்.

5.தக்காளியுடன் சர்க்கரையை கலந்து முகத்திற்கு scruber-ஆக பயன்படுத்தினால் முகத்தில் உள்ள dead cells நீங்கும்.

Exit mobile version