தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள உணவகம் ஒன்றில் முதல்முறையாக ரோபோக்கள் உணவு பரிமாறி வருவது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. தெலங்கானாவில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரோபோக்களை கொண்டு உணவு பறிமாறப்பட்டு வருகிறது. அழகு ரோபோ பணியாளர்கள் என்று பெயரிடப்பட்டுள்ள 4 ரோபோக்கள் இந்த உணவகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உணவகங்களில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வரும்நிலையில் ஐதராபாத்தில் முதல் முறையாக உணவகத்தில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த முயற்சி வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் ரோபோ கிட்சன் உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ரோபோ கிட்சன் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களது உணவை டேப் மூலம் முதலில் ஆர்டர் செய்கின்றனர். இதையடுத்து அவர்களது உணவு தயார் செய்யப்படுகிறது. தொடர்ந்து ரோபோக்கள் அவர்களது உணவை கொண்டுவந்து அவர்களது மேஜையில் பரிமாறுகின்றன.
Discussion about this post