நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிளித்தேன் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கரடிகளைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.
கோத்தகிரி அருகே உள்ள மிளித்தேன் கிராமத்திற்குள் 4 கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. பகல் மற்றும் இரவு நேரங்களிலும் தேயிலை தோட்டங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் சர்வ சாதரணமாக கரடிகள் உலா வருகின்றன. இதனால் பீதி அடைந்துள்ள மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து அட்டகாசம் செய்து வரும் கரடிகளை பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஆங்காங்கே கூண்டுகளை வைத்து வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.
Discussion about this post