21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த 100 படங்கள் – இந்தியாவுக்கு ஒரே ஒரு இடம்தான்

 

பிபிசி வெளியிட்ட 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்தியப் படம்தான் இடம்பெற்றுள்ளது.

21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் பட்டியலை பிபிசி வெளியிட்டது. இதற்காக 43 நாடுகளில் இருந்து 209 இயக்குநர்களின் படங்கள் முதல்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டன. அதிலிருந்து தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் தேர்வு செய்யப்பட்டன.

இதில் 19 மொழிகள் மற்றும் 24 நாடுகளில் இருந்து 64 இயக்குநர்களின் 100 படங்கள் உள்ளன. இதில் ஜப்பான் திரைப்படமான அகிரா குரோசவாவின் ‘செவன் சாமுராய்’ முதலிடத்தை பிடித்துள்ளது. பிரெஞ்சு மொழியில் இருந்து 27 படங்களும் மாண்டரின் மொழியில் இருந்து 12 படங்களும், இத்தாலி மற்றும் ஜப்பானிய மொழிகளில் இருந்து தலா 11 படங்களும் இடம்பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலில் ஒரே இந்தியப் படமாக 1955-ல் வெளியான சத்ய ஜித்ரேவின் ‘பதேர் பாஞ்சாலி’ இடம்பெற்றுள்ளது. பட்டியலில் இந்தப் படம் 15-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version