ஆலமரமே கோயிலாக கொண்டுள்ள "ஆலமரத்தடி மதுரை வீரன்"

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே ஆலமரமே கோயிலாக கொண்டு அமைந்துள்ள ஆலமரத்தடி மதுரை வீரன், அனைவரையும் அதிசயத்துடன் பார்க்க வைக்கும் கோயிலாக உள்ளது.

கடலூர் மாவட்டம் வளையமாதேவி அம்மன்குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆலமரமே கோவிலாக கொண்டு அமைந்துள்ள ஆலமரத்தடி மதுரை வீரன் அனைவரையும் அதிசயத்துடன் பார்க்க வைக்கும் கோவிலாக உள்ளது. கோவில் என்றவுடன் கட்டிடங்களிலோ, அல்லது திறந்த வெளியிலோ இருக்கும் தெய்வங்களை மட்டுமே பார்த்திருக்கிறோம். ஆனால் இங்குள்ள ஆலமரத்தடியில் அமைந்துள்ள மதுரை வீரன் சாமியோ, ஆலமரவிழுதுகளே தனது பாதுகாப்பு அரணாக கொண்டு அமைந்துள்ளது. இக்கோவில் அமைந்துள்ள சுமார் இரண்டு ஏக்கர் நிலபரப்பில் ஒரே ஒரு ஆலமரம் முழுவதுமாக தனது விழுதுகளை பரப்பி, மதுரை வீரன் சாமியை பாதுகாத்து வருவது, வேறு எங்கும் காணகிடைக்காத அரிய காட்சியாக உள்ளது. மதுரை வீரனிடம் வேண்டிக்கொண்டால் நினைத்து காரியம் அப்படியே நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version