விவசாய துறைக்கு வங்கிகள் கடன் வழங்குவதை மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் அமல்படுத்துவது குறித்து, ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழுவுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தெரிவித்தார்.
தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், விவசாயத் துறைக்கு கடன் வழங்க ஒதுக்கப்படும் நிதியை 11 சதவீதம் மத்திய அரசு அதிகரித்துள்ளதை சுட்டிக்காடிய நிர்மலா சீதாராமன், விவசாய கடன் வழங்க வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதனால், விவசாயத் துறைக்கு வங்கிகள், சரியாக கடன் வழங்குகிறதா எனப்து குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் விவசாய உற்பத்தி அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Discussion about this post