கடந்த ஆண்டு புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல் கட்ட பயிர் நிவாரண தொகை வழங்கப்பட்டநிலையில், தற்போது 2 ஆம் கட்ட தொகையை விவசாய கடனில் வரவு வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக சாகுபடி செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நாசமடைந்தன.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசு, நிவாரணத் தொகை அறிவித்தது.
அதன்படி, முதல் கட்டமாக 62 சதவிகித நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்ட தொகை தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேர்தல் முடிவிற்கு பின் அந்த தொகையை விவசாயிகளுக்கு கொடுக்காமல், அவர்களின் கடனில் வங்கிகள் வரவு வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சியில், விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட்ட நிலையில், தற்போது விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்
Discussion about this post