திண்டுக்கல் மாவட்டம் சோலைமலை அழகர் கோயிலில் வாழைப்பழம் சூறை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ளது சேவுகம்பட்டி கிராமம்,அக்கிராமத்தில் பழமைவாய்ந்த சோலைமலை அழகர் கோயில் உள்ளது. அங்கு நடைபெற்ற வழைப்பழம் சூறை திருவிழாவின் போது, மேளதாளங்கள் முழங்க நூற்றுக்கணக்கான மக்கள் வாழைப்பழங்களை தங்களது தலையில் சுமந்த படி ஊர்வலமாக கோயிலை சென்றடைந்தனர்.
அதன் பின்னர் சுவாமிக்கு படைக்கப்பட்ட வாழைப்பழங்கள் மக்கள் மத்தியில் தூக்கி எறியப்பட்டது. அதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூறையாடினர். இப்படி சூறையாடப்படும் பழங்களை உண்டால் நோய் நொடிகள் வராது என்பது இப்பகுதி மக்களின் ஐதீகமாக உள்ளது.
Discussion about this post