பல்லைப் பிடுங்கிய பல்வீர்சிங் விவகாரம்.. விசாரணை அதிகாரியை சந்திக்காத பாதிக்கப்பட்டவர்கள்..!

திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் குற்றவாளிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் காவல் அதிகாரி பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர்மீது விசாரணை நடத்துவதற்கு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணை அதிகாரியாக அமுதா என்பவர் நியமிக்கப்பட்டார். நேற்று நடைபெற்ற விசாரணையின் போது அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோர் வரவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில் ஆளும் தரப்பு இருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளது.

Exit mobile version