அரசு பேருந்து மீது கல் வீசிய வழக்கு: பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் ஜெயில் – தண்டனை நிறுத்திவைப்பு

விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பாகலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கள்ள சாராய விற்பனையை எதிர்த்து 1998 ஆம் ஆண்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு பேருந்து மற்றும் காவல்துறை வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் தொடர்பாக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உட்பட 108 பேர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் பாலகிருஷ்ணனுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version