சிறு குறு தொழிற்சாலைகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

கோவையில் சிறு குறு தொழிற்சாலைகளில் ஆயுத பூஜை விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கோவையில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடி வருகின்றன. ஆண்டு முழுவதும் தொழிலாளார்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் உறுதுணையாக இருக்கின்ற இயந்திரங்களை சிறப்பிக்கும் வகையில் விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக இயந்திரங்களை சுத்தம் செய்து, புதுப்பொலிவுடன் பூஜைகள் செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் ஆயுத பூஜை விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கோவையைப் பொருத்தவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகள் அனைத்திலும், இயந்திரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version