மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ள ஆட்டோ ரேஸ்கள்

சென்னை அடுத்த மதுரவாயலில் மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ள ஆட்டோ ரேஸால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மதுரவாயல்-தாம்பரம் நெடுஞ்சாலையில் 2020 ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ ரேஸில் விபத்துகுள்ளாகி ஒரு ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அன்றைய அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் ரேஸ் குழுக்கள் பெருமளவு ஒழிந்தன. இந்நிலையில் தினந்தோறும் அதிகாலையில் 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் புடை சூழ மீண்டும் ஆட்டோ ரேஸ் களைகட்ட தொடங்கியுள்ளது. 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பணயம் வைக்கப்படும் இந்த ஆட்டோ பந்தயத்தில் சில சமயங்களில் ஆட்டோக்களே கூட பந்தயமாக வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. ரேஸ் என்ற பெயரில் சாலைகளில் அதி வேகத்தில் சீறிப்பாயும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Exit mobile version