இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடக்கிறது. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடந்த 2 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது. இதனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச், உஸ்மான் கவாஜா களமிறங்கினார்கள். இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய இரண்டாவது ஓவரின் 3-வது பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஃபின்ச் வெளியேறினார். இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 33.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
100-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச், ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறி உள்ளார்.