ஆஸ்திரேலிய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 8 ரன்களுக்கும், டேவிட் வார்னர் 16 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஆடிய ஸ்டீவன் ஸ்மித் 5 ரன்களுக்கும், மார்க் ஸ்டோனிஸ் 21 ரன்களுக்கும், மேக்ஸ்வெல் 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த உஸ்மான் கவாஜாவும், விக்கெட் கீப்பர் அலெக் கேரியும், அணியை சரிவில் இருந்து மீட்டனர். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட், ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளையும், பெகுசன், ஜேம்ஸ் நீஷம் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

Exit mobile version