ஆஸ்திரேலிய கொடியேந்தும் வீரர்கள்? -ஒலிம்பிக்- தீபம் -விளையாட்டு அரங்கம்?-ஜப்பான் ஊரடங்கு!!

டோக்கியோ 2020 போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் தேசிய கொடிகளை ஏந்திச் செல்பவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டியின் துவக்கவிழாவில் அணிவகுப்பின் போது, நீச்சல் வீராங்கனை CATE CAMPBELL, கூடைப்பந்து வீரர் PATTY MILLS ஆகியோர் ஆஸ்திரேலியாவின் தேசிய கொடியை ஏந்திக் செல்ல உள்ளதாக அந்நாட்டு அணியின் தலைவர் லேன் செஸ்டர்மேன் தெரிவித்தார்.

33 விளையாட்டுகளில் 254 ஆடவர், 218 மகளிர் என 472 வீரர், வீராங்கனைகளைக் கொண்ட ஆஸ்திரேலிய அணிகள் ஏற்கனவே டோக்கியோ சென்றடைந்ததாகவும், அங்கு அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸ் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே வரும் 11ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜப்பானில் அமலில் உள்ளது. இந்நிலையில், ஒலிம்பிக் திருவிழாவின்போது, நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அடுத்த மாதம் 22ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. விளையாட்டு அரங்கில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட இருந்த நிலையில், தற்போது பார்வையாளர்கள் இல்லாத ஒலிம்பிக் திருவிழாவாக இருக்கும் என கூறப்படுகிறது.

கிரீஸ் நாட்டில் புறப்பட்ட ஒலிம்பிக் தீபம் தற்போது ஜப்பானின் சைதாமாவில் ((SAITAMA)) வலம் வந்தது. கடந்த ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தீபமேற்றப்பட்டு, அதன் பயணத்தை தொடங்கியது. பின்னர் அங்கிருந்து ஜப்பான் நாட்டை வந்தடைந்த ஒலிம்பிக் தீபம் Fukushima எல்லைக்குட்பட்ட Narahaவில் இருந்து மார்ச் 25ஆம் தேதி புறப்பட்டது. தற்போது, SAITAMA-வில் வலம் வந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் வரும் 23ஆம் தேதி Shinjuku-வில் உள்ள நியூ நேஷனல் விளையாட்டு அரங்கை சென்றடைகிறது.

செய்தியை காட்சிப்பதிவுடன் காண

↕↕↕↕↕↕↕↕↕↕↕↕

Exit mobile version