நீதிமன்றங்களில் குற்றவாளிகளை வழக்கறிஞர்கள் சந்தித்து பேசக் கூடாது என்று, சென்னை எழும்பூர் முதன்மை பெருநகர் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றவாளிகளை காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது, அவர்களின் வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் சந்தித்து பேசக்கூடாது என்று சென்னை எழும்பூர் முதன்மை பெருநகர் நீதிபதி மலர்விழி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கறிஞர்கள் சந்தித்து பேசும் போது, நீதிமன்ற வளாகத்தில் அசாதாரண சூழல் ஏற்படுவதாகவும், எனவே சட்ட ஆலோசனை வழங்குவதாக இருந்தால், உரிய அனுமதி பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். சிறையில் தான் குற்றவாளியை சந்திக்க வேண்டும் என்றும், நீதிமன்ற வளாகத்தில் சந்திக்க முயன்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.