மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ள நிலையில் அங்குள்ள மக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சாமன்னவாட்டர் ஹவுஸ் பகுதியில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு தண்ணீர் எடுக்கும் இடம் அருகே தற்போது திருப்பூர் மாநகராட்சிக்கு சுமார் 840 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பவானி ஆற்றில் இருந்து அதிக அளவு தண்ணீர் எடுக்க, ஆற்றின் குறுக்கே பாறாங்கற்களை கொண்டு ஆற்றினை திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் திசை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் கண்டுகொள்ளவில்லை எனக்கூறி அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Discussion about this post