விநாயகர் சிலை வடிவமைத்தவர்களை கைது செய்ய முயற்சி – பரபரப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பெரிய அளவிலான விநாயகர் சிலை வடிவமைத்தவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது…

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் பெரிய அளவிலான சிலை வைப்பதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து இருக்கிறது. கால தாமதமாக வெளியிட்டப்பட்ட இந்த அறிவிப்பால் பெரிய அளவில் சிலை செய்து வைத்து இருப்பவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பண்ருட்டி அடுத்த வையாபுரி பட்டினத்தில், பெரிய அளவில் விநாயகர் சிலை தயாரித்து வைத்திருந்த வடிவமைப்பாளர்களை, மாவட்ட காவல் கண்காளிப்பார் தலைமையில் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றனர். அவர்களது சிலை தயாரிக்கும் குடோனுக்கு சீல் வைத்து, வடிவமைப்பாளர்களை வலுக்கட்டாயமாக இழுந்துச் சென்றதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அரசு தங்களைத் தற்கொலைக்குத் தூண்டுவதாக, சிலை வடிவமைப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Exit mobile version