திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டிருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி… தமிழகத்தையே சூறையாடிக்கொண்டிருக்கும் கரூர் கும்பலின் கேங் லீடர் செந்தில்பாலாஜி அட்ராசிட்டிகளை விளக்குகிறது இந்த தொகுப்பு…
சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான முன்னாள் அமைச்சர்கள், தமிழக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்தனர். இதில் திமுக ஆட்சியில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள், பார் டெண்டர் முறைகேடுகள், கள்ளச்சாராய உயிரிழப்புகள், சட்ட ஒழுங்கு சீர்கெடுகள் மற்றும் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குதல் உள்ளிட்டவை குறித்தும் ஆளுநரிடம் புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய கரூர், சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வரும் வருமான வரித்துறை அதிகாரிகளை, திமுகவினர் தடுத்து அவர்களை பணிசெய்ய விடாமலும், அதிகாரிகளின் வாகனங்களை சேதப்படுத்தியும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் வீட்டிற்கு சோதனை மேற்கொள்வதற்காக சென்ற வருமானவரித்துறை பெண் அதிகாரியை, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா தலைமையிலான, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மற்றும் திமுக குண்டர்கள் சிறைபிடித்து பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
திமுகவினரின் அராஜகத்தால் கரூரில் 7 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடியாததாலும், திமுக குண்டர்களின் அச்சுறுத்தலாலும் 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
திமுகவினரின் அளவுக்கு மீறிய வெறியாட்டங்கள், அத்துமீறல்களை காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்து வருவதாக மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். மத்திய அரசின் அமைப்பான வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளும்போது, தகுந்த பாதுகாப்பு தரவேண்டியது மாநில காவல்துறையின் கடமை. ஆனால் (( செந்தில் பாலாஜியின் வீட்டில் ))ரெய்டு நடக்கும்போது, பெயருக்குக்கூட ஒரு போலீசாரை கூட பார்க்க முடியவில்லை… மதுக்கடைகளில், பார்களில் என்று மூலை முடுக்கெல்லாம் அட்ராசிட்டி செய்து மக்களை அச்சுறுத்தி வந்த செந்தில்பாலாஜியின் அட்ராசிட்டிகள் இன்னும் இன்னும் ஏராளம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது இன்று வரிமான வரித்துறையினரை மிரட்டிய அவரது ஆதரவாளர்களின் அட்ராசிட்டிகள்…
Discussion about this post