திரைப்படம் ஒன்றில் பிஎஸ்.வீரப்பா அவர்கள் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்பார். அதன் வழி திமுக என்று அரசுக்கட்டிலில் ஏறியதோ அந்த வசனத்திற்கான பலாபலன்களை தமிழ்நாடு அனுபவித்து வருகிறது. நான் ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் கையழுத்து மதுவிலக்கிற்கு எதிரானது என்று முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். பிறகு இதனை ஸ்டாலினும் வழிமொழிந்தார். ஆனால் இன்றைக்கு பார்த்துக்கொண்டால் தோசையைத் திருப்பிப் போடும் செயல்களில் இந்த அரசு ஈடுப்பட்டு வருகிறது. திராவிட மாடலா அல்லது உல்டா மாடலா என்று மக்களே கேட்கும் அளவிற்கு ஆட்சியை நடத்துகிறது.
மதுவினை ஒழிப்பதற்கு பதிலாக தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஏடிஎம் மிஷினில் பணத்தை செலுத்தினால் மதுபாட்டில் கையில் கிடைக்கும் மாதிரியான தொழில்நுட்பத்தை டாஸ்மாக் அமைப்பு அமைத்துள்ளது. குடியை ஒழிப்போம் 500 டாஸ்மாக் கடைகளை மூட உள்ளோம் என்றெல்லாம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி இப்போது முகத்தை எங்கு கொண்டு வைப்பார் என்று மக்கள் பேசிவருகிறார்கள். இது குடிமக்களுக்கான அரசா? அல்லது குடிக்கின்ற மக்களுக்கான அரசா? என்று அரசியல் விமர்சகர்கள் கடும் விமர்சனத்தை திமுக முன்பு வைக்கின்றனர்.
இது தவிர விளையாட்டு மைதானங்களில் மது விருந்துகள் நடத்தலாம் என்றும் அனுமதி உள்ளது. முதலில் தேசிய விளையாட்டுகளிலும் மது விருந்து இருக்கும் என்று அரசிதழ் வெளியான நிலையில் தற்போது சர்வதேச விளையாட்டுகளில் மட்டும்தான் மதுவிருந்து இருக்கும் என்று சொல்கிறார் அமைச்சர். அப்படி என்றால் செஸ் போன்ற விளையாட்டுகள் அரங்குக்குள் நடைபெறும் சர்வதேச விளையாட்டுகள் ஆகும். அப்படியென்றால் அங்கும் மது விருந்துகள் நடத்தப்படுமா என்று கேள்வி எழுகிறது.