இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் தற்போது அட்சய திருதியை ஹாஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.தங்கம் என்பது நம் பாரம்பரியத்தின் அடையாளம் எனவும் கூறலாம்.அனைத்து குடும்ப நிகழ்ச்சிகளிலும் தங்கம் அணியாமல் யாரும் கலந்துகொள்வதில்லை.பெண்களுக்கு தங்கத்தின் மீது ஒரு தீராத ஆசை உள்ளது என்பதை மறுக்கமுடியாது.
இன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பொங்கும் என மக்கள் பெரிதும் நம்புகின்றனர்.காலை 7 மணி முதல் மக்கள் நகைக்கடையில் குவிய தொடங்கினர்.அட்சய திருதி அன்று நகை வாங்குவது என்பது கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே அதிகரித்துள்ளது.மற்ற தினங்களில் தங்க விலை அதிகரித்து இருந்தால் தங்கத்தினை வாங்க யோசிக்கும் மக்கள், இன்று சிறிதளவும் யோசிக்கவில்லை.
மேலும் இன்று தங்கம் விலையானது நேற்றைய விலையிலிருந்து 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.3022 க்கும், ஒரு சவரன் 40 ரூபாய் அதிகரித்து ரூ.24, 176 க்கும் விற்கப்படுகிறது.வெள்ளி ஒரு கிராம் நேற்றைய விலையிலிருந்து 10 காசுகள் அதிகரித்து ரூ.40.20 காசுக்கு விற்கப்படுகிறது.