சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று டெல்லி சென்றிருந்தார். இதனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணியில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் சி.வி.சண்முகம், மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
Discussion about this post