பூமியை தாண்டி விண்வெளியில என்ன இருக்கு? அங்க மனிதர்கள் வாழ முடியுமா? அப்படிங்குற ஆராய்ச்சில பல உலக நாடுகள் பல வருஷமா ஈடுபட்டு வராங்க. அதுக்காக விண்வெளிக்கு மனிதர்கள அனுப்பி ஆராய்ச்சியும் பண்ணிட்டு வராங்ககுறது நமக்கு தெரியும். ஆனா விண்வெளிக்கு போற வீரர்கள் இறந்தா அவங்க உடல என்ன செய்வாங்க? இறந்த உடம்ப பூமிக்கு எடுத்துட்டு வருவாங்களா?-ன்னு நமக்கு சந்தேகம் வருவது சகஜம் தான். அதை பத்தி விரிவா பாக்கலாம்…
விண்வெளியில் மரணங்கள் எப்படி நிகழும்?
பொதுவாக விண்வெளி மரணங்கள் விண்வெளி அழுத்தம் தாங்காததால் ஏற்படும் உடல் பாதிப்பு, உடல்நலக்குறைவு, விபத்து, விண்வெளி உடையில் ஏதேவது சேதம் ஏற்பட்டால் மரணம் ஏற்படும். இதைத் தவிர விண்வெளி உடை இல்லாமல் ஒருவர் விண்வெளிக்கு வெளியே வந்தால் இறந்துவிடுவார்.
காரணம் விண்வெளியில் அழுத்தம் இல்லாததால் வீரர்களால் சுவாசிக்க முடியாது.. அதுமட்டுமில்லாம, இரத்தம் மற்றும் உடலில் இருக்கும் மற்ற திரவங்கள் கொதிக்கும் நிலைக்கு சென்று வெப்பமாகி இறந்துபோவோம்…
விண்வெளியில் இறந்தவங்க உடல பூமிக்கு கொண்டுவர எவ்வளவு நாள் ஆகும்?
பூமி-சுற்றுப்பாதை பயணத்தில் யாராவது இறந்தால் , குழுவினர் சில மணிநேரங்களில் இறந்தவரின் உடலை ஒரு காப்ஸ்யூலில் பூமிக்கு திருப்பி விடுவர். நிலவுல மரணம் நடந்தா, ஒரு சில நாட்கள்ல உடம்ப பூமிக்கு கொண்டு வரலாம். ஒருவேளை செவ்வாய் கிரக பயணத்தின்போது விண்வெளி வீரர் மரணம் ஏற்பட்டா உடல உடனடியா பூமிக்கி எடுத்து வரமுடியாது. இது மாதிரியான சூழல்ல செவ்வாய் பயணம் முடிஞ்சி வீரர்கள் திரும்பும் போது தான், இறந்தவர் உடலை பூமிக்கு கொண்டு வருவாங்க. அதுக்கு சில வருடங்கள் கூட ஆகலாம்.
உடல்களை எப்படி பாதுகாப்பார்கள் ?
பொதுவா பயணம் முடிய ஆண்டுக்கணக்கில் ஆகும் பட்சத்துல, இறந்த உடல்ல இருக்க கிருமிகள் மற்ற வீரர்களை பாதிக்காத வகையில, விண்கலத்துல இருக்கிற ஒரு தனி அறையிலயோ அல்லது உடலை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சிறப்பு பைகளிலோ உடல் பாதுகாக்கப்படும். விண்கலன்ல இருக்க நிலையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உடலை பாதுகாக்கும் வகையில இருக்கும். இந்த நடைமுறை எல்லாம் விண்வெளி நிலையத்திலயோ அல்லது விண்கலத்துலயோ மரணம் நடந்தா மட்டும் தான் பொருந்தும். ஒருவேளை விண்கலத்துக்கு வெளில வீரர் பிரிந்து போயோ அல்லது தொலைந்து போய் இறந்து போனா, அவங்க உடல மீட்குறது ரொம்ப கஷ்டம். அதுமாதிரியான உடல்கள் விண்வெளியிலயே விடப்படும்.
விண்வெளில உடல் அடக்கம் செய்ய முடியாதா?
விண்வெளில அடக்கம் செய்வதற்கான வாய்ப்பு இல்ல. காரணம், ஒருவேளை செவ்வாய் கிரகத்தோட மேற்பரப்புல இருக்கப்போ வீரர் இறந்தார்னா அவரோட உடல அங்கு அடக்கம் செய்ய அதிக உழைப்பு தேவைப்படும். அதே சமயம் அதிக ஆற்றலும் தேவைப்படும். ஆராய்ச்சிக்காக போன வீரர்கள் ஆற்றலை செலவிட முடியாது. ஏன்னா, ஆராய்ச்சிக்கே அதிக ஆற்றல் தேவைப்படும், அதனால அடக்கம் செய்யமாட்டார்கள். ஒருவேளை அடக்கம் செஞ்சா கூட உடல்ல இருக்க பாக்டீரியாக்கள் செவ்வாய் கிரக மேற்பரப்ப மாசு படுத்துங்குறதால அடக்கம் செய்ய மாட்டாங்க.
Discussion about this post