கடந்த மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி இரவு உதவிப் பேராசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. அதில் பல குளறுபடிகள் இருந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்திலும் அறிவிப்பு இல்லை.
மறுநாள் உயர் கல்வித் துறைச் செயலர் திரு.கார்த்திகேயன் அவர்கள் இது பொய்யான செய்தி என்றும் இன்னும் இரண்டு வாரத்தில் உண்மையான அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவித்தார். இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் பல ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டு 2015ஆம் ஆண்டு பணிநியமனம் செய்தார்கள். பிறகு 2019 ஆம் ஆண்டு மற்றுமொரு அறிவிப்பு வெளிவந்தது. இதை இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போதுதான் விடியும் என்று உதவிப் பேராசிரியர்கள் தங்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.