சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சூறாவாளி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
திருப்பரங்குன்றம் வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து முதலமைச்சர் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். ஓட்டப்பிடாரம் வேட்பாளர் மோகனை ஆதரித்து நாளையும், அரவக்குறிச்சி வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து நாளை மறுநாளும் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார். சூலூர் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து வரும் 14-ம் தேதியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்கிறார்.
Discussion about this post