கஜா புயல் பாதிப்பு: அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.3 கோடி நிதியை முதல்வரிடம் வழங்கியது

கஜா புயல் பாதிப்பு நிவாரணத்திற்காக பல்வேறு தரப்பினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிவாரண நிதி வழங்கினர்.

அந்த வகையில், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜா, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, புயல் நிவாரண நிதியாக 3 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

மேக்னசைட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அதன் தலைவர் கஜலட்சுமி முதலமைச்சரிடம் வழங்கினார்.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் சார்பில் 2 கோடி ரூபாய்க்கான காசோலையும் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

மகாசேமம் அறக்கட்டளையின் மகளிர் குழு மற்றும் அறக்கட்டளை சார்பில் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையும்,

சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் துரைசாமி, 18 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும்,

ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.

Exit mobile version