ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 170 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த தொடரின் 4-வது போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியாவிற்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. டேவிட் வார்னர் ரன்கள் ஏதுமின்றி பெவிலியன் திரும்ப, அடுத்து ஆடிய மார்னஸ் லபுஸ்சேனும், ஸ்டீவன் சுமித்தும் கைகோர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
2 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி 170 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மறுபடியும் மழை குறுக்கிட்டதால், அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் முடிவில் ஸ்டீவன் சுமித் 60 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Discussion about this post