டெல்லியில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிபெற்றார். அவருக்கு 58 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது,
அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை பாஜக தன்வசம் இழுக்க முயன்றுவருவதாக தகவல்கள் வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் அரசுகள் பாஜகவின் எம்.எல்.ஏ.க்களை விலைக்குவாங்கும் உத்தியாலேயே கவிழ்க்கப்பட்டதாக எதிர்க்கட்சிகளால் குற்றம்சாட்டப்பட்டுவந்த நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களும் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக வெளியான தகவல் அர்விந்த் கெஜ்ரிவாலை திடுக்கிடச்செய்தது.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவதாக அர்விந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 62 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி ஆம் ஆத்மியில் 58 பேர் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 4 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்குப்பின் பேசிய கெஜ்ரிவால், பாஜக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை வாங்க ரூ.800 கோடி வரை செலவு செய்யத் தயாராக இருந்ததாகவும், பாஜக எவ்வளவு செலவு செய்தாலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியாது என்றும் பேசினார்.