இந்த நிதியாண்டிற்குள் 70 ஆயிரம் கோடி வாராக் கடன் வசூலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நம் நாட்டின் முக்கிய பிரச்சினையாக வாராக்கடன் பார்க்கப்படுகிறது. வாராக்கடனை வசூலிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்மூலம் இதுவரை 80 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதன்மூலம் 66 வழக்குகளில் தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், வரும் மார்ச் மாத இறுதிக்குள் 70 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்படும் என்று அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதன்மூலம் 12 பெரிய வழக்குகளில் தீர்வு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.