ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலத்தை வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்குமாறு கால அவகாசம் கேட்டு ஆணையம் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்க அரசுக்கு ஆணையம் கடிதம் வழங்கியுள்ளது. ஜெயலலிதாவின் உறவினர்கள், உதவியாளர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் என நூற்றுக்கணக்கானோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.
இந்தநிலையில் இன்னும் விசாரணை நடத்தி முறையாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் வரும் ஜூன் மாதம் வரை அறிக்கையை சமர்ப்பிக்க ஆணையம் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆணையம் கால அவகாசம் கேட்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post