கேரள மாநிலம் ஆரியங்காவு பேச்சியம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில், ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் வளாகத்தில் உள்ள ஆரியங்காவு பேச்சியம்மன் கோவிலில் தை பொங்கலை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தமிழரின் பண்பாடு மாறாமல் பாரம்பரிய முறைப்படி, கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பானைகளில் பொங்கல் வைத்து, குலவையிட்டு சூரிய வழிபாடு செய்தனர்.
Discussion about this post