அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர்கள் குழு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
அயோத்தி வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட மத்தியஸ்தர்கள் குழு உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை நேற்று சமர்பித்தது. உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலிக்கு அருகில் பாபர் மசூதி அமைந்திருந்தது. இது கடந்த 1992 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உரிமை கோரி தொடரப்பட்ட வழக்குகளை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்து 2010ல் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனையை நீதிமன்றத்துக்கு வெளியே பேசி தீர்ப்பதற்கு வழிவகுக்கும் வகையில் மத்திய குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் அமைத்தது. இதில் சம்மந்தப்பட்டவர்களுடன் இக்குழு 8 வாரங்களில் பேச்சுவார்த்தையை முடிக்க உத்தரவிட்டது. அதன்படி வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், கடந்த ஜூலை 29 ம் தேதியில் இருந்து மூன்று நாட்களுக்கு இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து மத்தியஸ்தர் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
Discussion about this post