பத்திரமாக பயணம் செய்யுங்கள்:அன்பு ரசிகனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட டுவீட்

தனக்கு பிடித்தமானவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய நினைப்பது மனித இயல்பு . அதிலும் தனக்கு பிடித்த திரையுலக நட்சத்திரங்களுக்காக ரசிகர்கள் தங்களின் அன்பை பல விதத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படிதான் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சந்தர் என்பவர் ஏ.ஆர்.ரஹ்மானின் மீது உள்ள அதீத அன்பை வித்தியாசமான முறையில் வெளிகாட்டியுள்ளார்.

அவரின் புதிய பிஎம்டபிள்யூ காரில் I love ARR என்று பெயர்ப்பலகையில் பொறித்துள்ளார்.மேலும் காருடன் போட்டோ எடுத்து ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.இது வைரலாக தொடங்கியவுடன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இந்த ரசிகனின் அன்பு பற்றி தெரிய வந்தது.உடனே ஏ.ஆர்.ரஹ்மான் சந்தரின் ட்வீட்டை குறிப்பிட்டு ‘பத்திரமாக பயணம் செய்யுங்கள்’ என ட்வீட் செய்துள்ளார்.இதனை பார்த்த சந்தர் இன்ப மழையில் நனைந்துள்ளார். தனது ரசிகரின் மீது ஏ.ஆர்.ரஹ்மான் அக்கரையுடன் பேசியிருப்பது ரசிக்கக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது.

Exit mobile version