மூப்பில்லா தமிழ்த்தாயே! இணையத்தைக் கலக்கும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல் ட்ரெய்லர்

தனியிசைக் கலைஞர்களுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கிய மாஜா குழுமத்தின் தமிழ்ப்புத்தாண்டு வெளியீடாக வந்துள்ள, மூப்பில்லா தாயே தமிழே என்ற பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் தமிழ்ப்பற்று உலகறிந்தது. குறிப்பாக அண்மைக்காலமாக தமிழக மேடைகளில் தொகுப்பாளர்கள் தன்னை அழைக்கும்போது தமிழில் தன் பேச வேண்டும் என்பதையும் கூட கடப்பாட்டோடு கடைபிடித்து வருகிறார். இந்நிலையில், தமிழே தாயே என்ற பொருண்மையில் தமிழின் பெருமையைக் குறித்து ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல் ஒன்று வெளிவர உள்ளது என்பதற்கான முன்னோட்ட ட்ரெய்லரை மாஜா யூட்யூப் சேனலில் வெளியிட்டார். 

புயல் தாண்டியே விடியல் என்று தொடங்கும் இந்தப் பாடலை பிரபல பாடலாஅசிரியர் தாமரை எழுதியுள்ளார். விரைவில் பாடல் வெளியாகும் நிலையில், கேட்க தான் ஆர்வமாயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

தற்போது இந்தப் பாடல், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியும் பகிரப்பட்டும் வருகிறது. முன்னதாக சர்வதேச ட்ரெண்டிங்கில் கலக்கிய என்ஜாய் எஞ்சாமி பாடலும் இதே சேனலில் தான் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version