மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று முதல் செலவினப் பார்வையாளர்கள் தங்களது பணிகளை தொடங்க உள்ளதாக கூறினார். தமிழகத்தில் இதுவரை, வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 9 கோடியே 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹூ குறிப்பிட்டார்.
தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படும் இலவசத் திட்டங்களை எப்படி செயல்படுத்த போகிறோம் என்பது குறித்த நிதி ஆதாரம் தொடர்பான தகவல்கள் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். 26ம் தேதி முதல் பொதுப் பார்வையாளர்கள் தங்களது பணியை துவங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.