இந்திய ராணுவத்தில் பெண்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் முதல் முறையாக ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது.
இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரியாக பிபின் ராவத் பதவி ஏற்றபின், ராணுவத்தில் பெண்கள் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் முன்வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த பாதுகாப்புத்துறை அமைச்சகம், அதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இதையடுத்து, இந்திய ராணுவத்தில் பெண்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் முதல் முறையாக ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது. வயது, கல்வித் தகுதி அடிப்படையில், ஆட்களை தேர்வு செய்ய இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.